பல்வேறு இந்திய மொழிகளில் திரைப்படங்கள் தயாரிப்பு / இணை தயாரிப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் அறிவி்த்துள்ளது
மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம், பல்வேறு இந்திய மொழிகளில் திரைப்படங்கள் தயாரிப்பு / இணை தயாரிப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ளது. விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் https://nfdcindia.com/apply-now/ என்ற இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதலின்படி விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம், 6-ம் தளம், டிஸ்கவரி ஆஃப் இந்தியா பில்டிங், டாக்டர் அன்னி பெசன்ட் ரோடு, நேரு செண்டர், ஓர்லி, மும்பை -400 018 என்ற முகவரிக்கு கட்டாயம் அனுப்பி வைக்க வேண்டும். இது தவிர விண்ணப்பங்களை புதுதில்லி, கொல்கத்தா மற்றும் சென்னையில் உள்ள மண்டல அலுவலகங்கள் மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள கிளை அலுவலகத்திற்கும் https://www.nfdcindia.com/contact-us/ என்ற இணையதளத்தில் உள்ள அஞ்சல் முகவரிக்கும் அனுப்பி வைக்கலாம். அவசர விசாரணைகளுக்கு 0 2 2 – 6 6 2 8 8 2 8 8 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
விண்ணப்பங்களை 31 ஜனவரி 2022 வரை அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு [email protected] என்ற மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொள்ளலாம் என தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் அறிவித்துள்ளது.