பர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படக்குழு
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. விக்னேஷ் சிவன் மற்றும் லலித் குமார் இருவரும் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
படம் இந்தாண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஓடிடியா? திரையரங்கா? என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதையடுத்து தற்போது சமந்தாவின் புகைபடத்துடன் கூடிய படத்தின் போஸ்டரும், அதில் ‘கதிஜா’ என்ற அவர் கதாபாத்திரத்தின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.