பயணங்களின்போது கழிவறை இல்லாமல் சிரமப்பட்டுள்ளேன்- சென்னை மாநகராட்சியின் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு அழைக்கும் கிருத்திகா உதயநிதி

0
83

பயணங்களின்போது கழிவறை இல்லாமல் சிரமப்பட்டுள்ளேன்- சென்னை மாநகராட்சியின் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு அழைக்கும் கிருத்திகா உதயநிதி

தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் மனைவியும், இயக்குநருமான கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் கழிவறையும் அவசியம் குறித்தும் பொதுக் கழிவறையை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு குறித்தும் நடைபெறவுள்ள விழிப்புணர்வு நிகழ்ச்சி குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், ‘சின்ன வயதிலிருந்தே பயணம் செய்வது பிடிக்கும். என்னுடைய அப்பாவுடன் நிறைய பயணம் செய்துள்ளேன். பயணம் நல்ல அனுபவமா இருந்தாலும் எல்லாரும் சொல்லக்கூடிய ஒரு மோசமான அனுபவம் கழிவறை பயன்படுத்துவதுதான். நான் நிறையமுறை யார் என்றே தெரியாதவர்கள் வீட்டில் நின்று அவர்கள் கழிவறையை பயன்படுத்த அனுமதிகோரியுள்ளேன். இதற்கு ஒரு தீர்வு காணும் வகையில் செய்வதில் மேப்பத்தான் சாந்தோம் உயர் நிலைப் பள்ளியில், ரீசைகிள் பின், சியர் ஆர்கனைசேஷன், டச் மினிஸ்ட்ரி, சென்னை மாநகராட்சி எல்லாரும் இணைந்து நடத்தக் கூடிய விழிப்புணர்வு நிகழ்ச்சி. அவர்கள், சென்னையிலுள்ள பொதுக் கழிவறைகளை அடையாளம் காணவுள்ளனர். மீண்டும், பொதுக் கழிவுகளை மக்கள் பயன்பாட்டுக்கு எப்படி கொண்டுவரலாம் என்பது குறித்து ஆலோசிப்போம்’ என்று தெரிவித்துள்ளார்.