படப்பிடிப்புக்காக ஜார்ஜியா புறப்பட்டார் நடிகர் விஜய்!

0
304

படப்பிடிப்புக்காக ஜார்ஜியா புறப்பட்டார் நடிகர் விஜய்!

‘மாஸ்டர்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நெல்சன் திலீப் குமார் இயக்கும் புதிய திரைப்படத்தில் விஜய் நடிக்கிறார். இந்த படத்திற்கான அறிவிப்பு இரண்டு மாதத்திற்கு முன்பு அதிகாரபூர்வமாக வெளியானது. அதேபோல் ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

அதன்படி, கடந்த வாரம் படத்திற்கான பூஜை நடைபெற்றதுடன் இரண்டு நாள்களுக்கான படப்பிடிப்பும் சென்னையில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து தேர்தலுக்குப்பின் ஐரோப்பிய நாடுகளில் படப்பிடிப்பு நடத்தப்படும் என்றும் படக்குழுவினர் தரப்பில் கூறினர். இந்நிலையில், நேற்று இரவு நடிகர் விஜய் ஜார்ஜியா நாட்டிற்கு புறப்பட்டார். படக்குழுவினர் ஏற்கெனவே சென்று அரங்கம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது நடிகர் விஜய் ஜார்ஜியா சென்றுள்ளார். இதன் காரணமாக நாளை முதல் அங்கு படப்பிடிப்பு தொடங்க உள்ளது என படக்குழுவினர் கூறுகின்றனர்.

விஜய் நடிக்கவுள்ள இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.