நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரித்து விக்ரம் பிரபு நடிக்கும் ‘டாணாக்காரன்’

0
142

நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரித்து விக்ரம் பிரபு நடிக்கும் ‘டாணாக்காரன்’

விக்ரம் பிரபு நடித்திருக்கும் டாணாக்காரன் திரைப்படம் திரையரங்குகளுக்குப் பதில் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.

விக்ரம் பிரபு நடிப்பில் கடைசியாக முத்தையா இயக்கத்தில் ‘புலிக்குத்தி பாண்டி’ படம் வெளியானது. இப்படம் நேரடியாக டி.வி.யில் வெளியானது. தற்போது ‘டாணாக்காரன்’ படத்தில் விக்ரம் பிரபு நடித்து இருக்கிறார். இப்படம், நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

டாணாக்காரன் படத்தை வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த தமிழ் என்பவர் இயக்கி இருக்கிறார். சுதந்திரப் போராட்டத்திற்கு முன்பான காவல்துறையினரை ‘டாணாக்காரன்’ என்றுதான் அழைப்பார்கள். போஸ்டரிலும் விக்ரம் பிரபு அதே கெட்டப்பில் இருக்கிறார்.

பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் சார்பில் டாணாக்காரனை எஸ்ஆர் பிரகாஷ் பாபு, எஸ்ஆர் பிரபு, கோபிநாத், தங்க பிரபாகரன் ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக அஞ்சலி நாயர் நடிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். மகேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.

டாணாக்காரனை டிஸ்னி + ஹாட் ஸ்டார் நிறுவனம் வாங்கியுள்ளது. விரைவில் பட வெளியீட்டை அறிவிக்க உள்ளனர்.