நேச்சுரல் சலூன் நிறுவனர் சி.கே.குமரவேல் மற்றும் ஜூனியர் குப்பண்ணா இயக்குநர் பாலச்சந்தர் ஆகியோர் இணைந்து ஆழ்வார்பேட்டையில் உள்ள ஜூனியர் குப்பண்ணாவில் இந்த பிரச்சாரத்தை தொடங்கி வைத்தனர்.
இரு நிறுவனங்களின் ஒப்பந்தப்படி, இந்தியாவின் தலைசிறந்த சலூனான நேச்சுரல்ஸில் 500 ரூபாய் அல்லது அதற்கு மேல் கட்டணம் செலுத்தினால் பிரியாணிக்கு புகழ்பெற்ற ஜூனியர் குப்பண்ணாவில் 15% தள்ளுபடி வழங்கப்படும். அதேபோல் 1000 ரூபாய்க்கு மேல் கட்டணம் செலுத்தும்போது 20% தள்ளுபடியும் இலவசமாக லைம் மிண்ட் குளிர்பானமும் பெறமுடியும். இந்த சலுகை இது இரவு உணவிற்கு மட்டுமே பொருந்தும்.
அதேபோன்று ஜூனியர் குப்பண்ணாவில் 500 ரூபாய்க்கு மேல் உணவருந்தினால் நேச்சுரல் சலூனில் 15% தள்ளுபடியும், 1000 ரூபாய்க்கு மேல் உணவருந்தினால் 20% தள்ளுபடியும் 2 நெயில் பாலீஷ் கட்டணமின்றியும் பெற முடியும்.
இந்த சலுகை சென்னையில் உள்ள அனைத்து நேச்சுரல்ஸ் சலூன் & ஜூனியர் குப்பண்ணா விற்பனை நிலையங்களிலும் வழங்கப்பட உள்ளது.
இந்த அறிவிப்பை வெளியிட்ட
நேச்சுரல்ஸ் சலோனின் நிறுவனர் சி.கே. குமரவேல், பிராண்டுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு எவ்வாறு தொடங்கியுள்ளது என்பதை விரிவாக குறிப்பிட்டதோடு, கொரோனா அனைத்து தொழில்முனைவோருக்கும் ஒற்றுமையாக இருக்க ஒரு பாடத்தை பயிற்றுவித்திருக்கிறது என்றார். மக்கள் பிராண்டை விரும்பும் காலம் மாறி, பிராண்ட் வாடிக்கையாளர்கள் நம்பிக்கையை பெற வேண்டிய காலம் உருவாகி உள்ளதாகவும் அவர் கூறினார். நேச்சுரல்ஸ் மற்றும் ஜூனியர் குப்பண்ணா ஆகிய பிராண்ட்களின் முன்னுரிமை வாடிக்கையாளர்களை உள்ளடக்கியது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜூனியர் குப்பண்ணா உணவக இயக்குனர் பாலச்சந்தர், பெண்களுக்கு சிறப்பு வாய்ந்த மார்ச் மாதத்தை கொண்டாட இரண்டு பெரிய பிராண்டுகள் ஒன்றிணைந்தது குறித்துப் பேசினார். மேலும் விடுமுறை நாட்களில் குடும்பங்களும் குழந்தைகளும் கூடி இந்த ஒத்துழைப்பை அனுபவிக்கலாம் என்று கூறிய அவர், உணவும் அழகும் அனைத்து மனிதர்களின் உணர்வோடு கலந்தது என்றும் இதனால் இந்த இரண்டு பிராண்டுகளுக்கும் அறிவித்துள்ள இந்த சலுகை வாடிக்கையாளர்களுக்கு பொருத்தமானது என்றும் கூறினார்.