நீதானே எந்தன் பொன்வசந்தம்

0
313

நீதானே எந்தன் பொன்வசந்தம்

புதுமையான மற்றும் முற்போக்கு சிந்தனையுடன் தமிழ் தொடர்களை வழங்கி வரும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகும் நெடுந்தொடர் “நீதானே எந்தன் பொன்வசந்தம்”.  

இத்தொடரானது ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு தொடராகும். காதலுக்குவயது ஒரு தடையில்லை என்பதை நிரூபிக்கும் விதமாக 40 வயது ஆணுக்கும்,20வயதுபெண்ணிற்கும் இடையே மலரும் காதலே இத்தொடரின் கதை கருவாகும்.  இந்த தொடரில் ஜெய் ஆகாஷ், தர்சனா, சாய் ராம், சோனியா போஸ் வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஜீ தமிழின் பிரபலமான நிகழ்ச்சியான ‘நீதானே  எந்தன் பொன்வசந்தம்’ கதையில் சில சுவாரஸ்யமான  திருப்பங்களுடன் இந்த வாரம் விடை காண வருகிறது .

போலீசார், அனு மற்றும் பங்கஜ் உதவியுடன், சூர்யாவின் விருந்தினர் மாளிகையில் கண்டெடுக்கப்பட்ட சடலத்தின் மர்மத்தை வெளிக்கொண்டு வரும் முயற்சியில் இருக்கும்போது அது காணமல் போன மான்சியாக இருக்குமோ என்ற கோணத்தில் விசாரணைபோலீசார் முடுக்கிவிட, குற்றவாளியாக சூர்யாவை இன்ஸ்பெக்டர் கைகாட்ட, உயிருடன் திரும்பி வருகிறாள் மான்சி? ஆனால் எங்கே போனான் சூர்யபிரகாஷ்?

சூர்யபிரகாஷ் திரும்பி வருவாரா, தேவநந்தினியின் வீட்டில் எடுக்கப்பட்ட சடலத்திற்கான விடையை தருவாரா, காணுங்கள் நீதானே எந்தன் பொன்வசந்தம் திங்கள் முதல் சனி வரை இரவு 7:30 மணிக்கு உங்கள் ஜீ தமிழில்.