நான் திமிர் பிடித்தவள் தான்… விமர்சனங்களுக்கு வனிதா விஜயகுமார் பதிலடி

0
109

நான் திமிர் பிடித்தவள் தான்… விமர்சனங்களுக்கு வனிதா விஜயகுமார் பதிலடி

தன்னைப் பற்றி எழும் ட்ரோல்களுக்கு தனது பாணியில் பதிலடி கொடுத்துள்ளார் நடிகை வனிதா விஜயகுமார்.

பிக் பாஸ் சீசன் 3, குக் வித் கோமாளி சீசன் 1, கலக்கப் போவது யாரு, பிக் பாஸ் ஜோடிகள் என விஜய் தொலைக்காட்சியில் தொடர்ச்சியாகப் பல்வேறு நிகழ்ச்சிகளில் பணியாற்றியவர் நடிகை வனிதா விஜயகுமார். இந்நிலையில் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் நடுவர் ரம்யா கிருஷ்ணனுடன் முரண்பட்டு, அதிலிருந்து விலகினார்.

மறுபுறம் மூன்றாவது கணவர் பீட்டர் பாலை விட்டு பிரிந்த வனிதா, படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினர். பிரசாந்தின் அந்தகன், பவர் ஸ்டாருடன் பிக்கப் ட்ராப், வசந்தபாலனின் புதிய படம்ஆகியப் படங்களை கைவசம் வைத்துள்ளார்.

அதோடு தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஓடிடி-யில் ஒளிபரப்பாவதால், போட்டியாளர்கள் பற்றி இன்னும் ஆழமாக தெரிய வந்தது. வனிதா பிக் பாஸ் வீட்டில் பல சண்டைகளில் ஈடுபட்டது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியது.

இந்நிலையில் தனது மெண்டல் ஹெல்த் பாதிக்கப்படுவதாகக் கூறி, சமீபத்தில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து விலகினார் வனிதா. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் தனது மகளுடன் புகைப்படத்தை பதிவிட்ட வனிதா, ”என்னை திமிர்பிடித்த, அகங்காரமான நபர் என நினைப்பவர்களுக்கு… ஆம் நான் அப்படித்தான். அதற்கு நான் தகுதியானவள் தான். அதை ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் அது உங்கள் பிரச்சனை, என் பிரச்சனை இல்லை. எனக்கு நான் தான் முக்கியம்” எனத் தெரிவித்துள்ளார்.