‘நாட்டுக் கூத்து’ வீடியோ பாடல் வெளியானது

0
93

‘நாட்டுக் கூத்து’ வீடியோ பாடல் வெளியானது

’பாகுபலி 2’ வெற்றிக்குப்பிறகு ராஜமெளலியின் இயக்கத்தில் கடந்த மார்ச் 25 ஆம் தேதி வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ ரூ.1000 கோடி ரூபாய்க்குமேல் வசூல் சாதனை செய்துள்ளது. ஆந்திராவில் வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களான அல்லுரி சீதாராமராஜூ, கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு ’ஆர்ஆர்ஆர்’ படத்தை உருவாக்கியுள்ளார் ராஜமெளலி.

1920 களில் நடக்கும் கதையாக உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் அல்லூரி சீதாராமராஜு கதாபாத்திரத்தில் ராம் சரணும், கொமரம் பீம் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்டிஆரும் நடிப்பில் கவனம் ஈர்த்திருந்தனர். அஜய் தேவ்கான், ஆலியா பட், உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு கீரவாணி இசையமைத்துள்ளார்.

இந்தியாவின் டாப் டான்ஸர்களாக அறியப்படும் இரு நட்சத்திரங்களும் இந்தப் பாடலில் போட்டா போட்டியாக இணைந்து நடனமாடினர்.

நடிகர்களின் நடிப்பு ப்ளஸ் கதைக்களம் படத்தின் வெற்றிக்கு காரணமாக பார்க்கப்படுவதுபோல், ராம் சரணும் ஜூனியர் என்டிஆர்ரும் ’காட்டு காட்டு’ என்று தங்கள் நடனத்திறமையை போட்டிப் போட்டு தெறிக்கவிட்ட ’நாட்டு நட்டு’ பாடலும் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் ‘நாட்டுக் கூத்து’ (தமிழ்)  மற்றும் நாட்டு நாட்டு பாடல் (தெலுங்கு) வீடியோ பாடலை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டுள்ளனர். எம்.எம்.கீரவாணி இசையமைத்த பாடல்கள் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளது. ‘நாட்டுக் கூத்து’ (தமிழ்)  மற்றும் நாட்டு நாட்டு (தெலுங்கு) பாடல் பார்வையாளர்களை திரையரங்குகளில் தங்கள் இருக்கைகளில் அமர வைத்ததில் ஆச்சரியமில்லை.