நடிகை சலோனி லுத்ராவுக்கு இந்திய அளவில் பெரும் ரசிகர் கூட்டத்தை பெற்று தந்த படம் எது தெரியுமா?

0
639

நடிகை சலோனி லுத்ராவுக்கு இந்திய அளவில் பெரும் ரசிகர் கூட்டத்தை பெற்று தந்த படம் எது தெரியுமா?

இந்திய சினிமாவின் அரிதான நடிகைகளில் ஒருவர் சலோனி லுத்ரா. அடுத்தடுத்து கிடைக்கும் பட வாய்ப்புகளை ஒப்புக்கொள்ளும் நடிகை அல்ல அவர். அவர் தேர்வு செய்து நடித்திருக்கும் திரைப்படங்களே அவரின் திறன்மிகு தனித்தன்மையான நடிப்பையும், அவர் குணத்தையும் வெளிப்படையாக சொல்லும்.

தமிழில் “சர்பம்” படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர், இரட்டை வேடத்தில் அற்புத நடிப்பை வழங்கி, சிறந்த நடிகை விருதையும் வென்றார். அவர் தனது பாத்திரங்களை வெகு கவனமுடன் தனக்கு திருப்தியளிக்கும் படங்கள் மட்டுமே செய்வதாக சொல்லியிருந்தார். படங்களை தேர்ந்தெடுப்பதில் அவரது தனித்தன்மை அனைத்து மொழிகளிலும் “ஒலியும் ஒலியும், கஜல், ஃபர்பிட்டன், டர்னட் அவுட்”, என்பது போன்ற மிகச்சிறந்த படங்கள் மூலம் அழியாத கதாப்பத்திரங்களை தந்து, இந்தியா தாண்டி உலகம் முழுதும் பெரும் பெயரை பெற்று தந்ததுள்ளது.

அவரது தனித்தன்மை மிக்க தைரியமான நடிப்பு அவருக்கு ஒரு அமெரிக்க பட வாய்ப்பையும் பெற்று தந்தது. அப்படம் விமர்சகர்களின் பாரட்டையும், விருதுகளையும் பெற்றுள்ளது.

சமீபத்தில் அவர் நடித்த தெலுங்கு படமான “பானுமதி ராமகிருஷ்ணா” திரைப்படத்தில் அவரது அட்டகாச நடிப்பு, பெரும் பாராட்டை பெற்று வருகிறது. இப்படம் அவருக்கு இந்திய அளவில் பெரும் ரசிகர் கூட்டத்தை பெற்று தந்துள்ளது. இப்படத்தில் இவரது கதாப்பாத்திரத்தின் சிறந்த நடிப்பு இந்திய முழுமைக்கும் இயக்குநர்களையும் கவர்ந்துள்ளது. இப்போது தமிழிலும் அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அவரால் எவ்விதமான கதாப்பாத்திரங்களையும் செய்ய முடியுமென இயக்குநர்கள் பாராட்டி வருகின்றனர்.

ALSO READ:

Actress Salony Luthra’s spellbinding performance in Telugu movie ‘Bhanumati Ramakrishna’ brought her a huge fan base in India?