நடிகர் விவேக் உடல் தகனம் செய்யப்பட்டது – 78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை

0
260

நடிகர் விவேக் உடல் தகனம் செய்யப்பட்டது – 78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை

‘சின்னக் கலைவாணர்’ என்ற அழியாப் புகழுடன் தமிழ்த் திரையுலகில் தடம்பதித்த மறைந்த நடிகர் விவேக்கின் உடல், காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

சென்னை – விருகம்பாக்கத்திலிருந்து அவரது உடல் சாலை வழியாக எடுத்துச் செல்லப்படும்போது வழியெங்கும் மக்கள் காத்திருந்து அஞ்சலி செலுத்தினர். திரையுலகினர், ரசிகர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற இறுதி ஊர்வலத்தில் சிலர் மரக்கன்றுகளை ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், 78 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்க, தமிழக காவல்துறை இறுதி மரியாதை செலுத்தினர்.

அதன்பின், இறுதிச் சடங்கு முடிந்தவுடன், மேட்டுக்குப்பம் மின் மயானத்தில் நடிகர் விவேக்கின் உடல் தகனம் செய்யப்பட்டது.