நடிகர் விக்ரம்-க்கு கொரோனா தொற்று, வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்

0
155

நடிகர் விக்ரம்-க்கு கொரோனா தொற்று, வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்

நாடு முழுவதும் கொடிய கொரோனா வைரசின் தாக்கம் தற்போது குறைந்து வருகிறது. வைரஸ் தொற்றுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் விக்ரம்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நடிகர் விக்ரமுக்கு கடந்த சில தினங்களாக லேசான காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு இருந்ததால் அவர் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளதால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி விக்ரம் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்.