நடிகர் ’மாரி’ செல்லதுரை மாரடைப்பால் மரணம்

0
159

நடிகர் ’மாரி’ செல்லதுரை மாரடைப்பால் மரணம்

தமிழில் ’தெறி’, ’மாரி’, ’கத்தி’, ’நட்பே துணை’ போன்ற பல திரைப்படங்களில் நடித்தவர் செல்லதுரை. செல்லத்துரை ஐயா என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் இவர் நேற்று மாலை மாரடைப்பால் உயிரிழந்தார். 84 வயதான இவர் சென்னையிலுள்ள அவரது வீட்டுக் கழிப்பறையில் சுயநினைவின்றி மயங்கி கிடந்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மூத்த தமிழ் குணச்சித்திர நடிகர் செல்லதுரை மரணம் | Old Tamil Actor  Chelladurai Aiya passed away | Puthiyathalaimurai - Tamil News | Latest  Tamil News | Tamil News Online | Tamilnadu News

ஏற்கெனவே கடந்த வாரம் நடிகர் விவேக் மாரடைப்பால் மரணமடைந்ததை அடுத்து நேற்று செல்லதுரை மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பிரபல இயக்குநர் கே.வி. ஆனந்த் இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார்.

செல்லதுரையின் மறைவுக்குத் திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் விவேக் மாரடைப்பால் காலமானார். தொடர்ந்து அடுத்த சில நாட்களிலேயே இயக்குநர் கே.வி.ஆனந்த் மற்றும் நடிகர் செல்லதுரை ஆகியோர் மாரடைப்பால் காலமானது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.