நடிகர் பாக்யராஜ், மனைவி பூர்ணிமாவுக்கு கொரோனா தொற்று உறுதி

0
176

நடிகர் பாக்யராஜ், மனைவி பூர்ணிமாவுக்கு கொரோனா… வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார் நடிகர் சாந்தனு

கொரோனாவின் இரண்டாவது அலையில் பொதுமக்கள் மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்கள் என பல துறையினரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில், தனது பெற்றோருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

சாந்தனு தனது ட்விட்டரில், ”எனது பெற்றோர் பாக்யராஜுக்கும், பூர்ணிமா பாக்யராஜுக்கும் இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதனால் மருத்துவர்களின் அறிவுறுத்தல்படி எனது பெற்றோரும் எங்கள் ஊழியர்களும் தனிமைப்படுத்திக்கொண்டனர். கடந்த 10 நாட்களில் எங்களுடன் தொடர்பில் இருந்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். அனைவரும் விரைவில் நலம்பெற வேண்டிக்கொள்ளுங்கள்” என்று கோரிக்கையும்யும், வைத்திருக்கிறார்.