நடிகர் நானியின் அசத்தலான அவதாரத்தில் தசரா படத்தின் முதல் சிங்கிள் “தூம் தாம் தோஸ்தான்” விரைவில் வெளியாகிறது!
நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்திய படமான தசரா படத்திலிருந்து படு ரகளையான நடனத்துடன் கூடிய அசத்தலான பாடல் தசரா அன்று வெளியிடப்படவுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் தூம் தாம் தோஸ்தான் பாடல், நிலக்கரிச் சுரங்கங்களில் நானி நண்பர்களுடன் சேர்ந்து நடனமாடும் அற்புதமான நடனத்துடன் கூடிய பாடலாக இருக்கும்.
பாடலிலிருந்து ஒரு அழகான போஸ்டர் தற்போது வெளியாகிவுள்ளது. முரட்டுத்தனமிகுந்த அதிரடியான கிராமத்து லுக்கில், நானி அசத்தலாக இருக்கிறார். மிரட்டலான தோற்றம் அவரது கதாபாத்திரத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. அழுக்கு லுங்கி, கலைந்த தலை முரட்டு தாடி திறந்த சட்டை உள்ளே பனியனுடன் மிரட்டலான புன்னகையுடன் மிளிர்கிறார் நானி.
ஶ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி இப்படத்தை தயாரிக்கிறார்கள். அறிமுக இயக்குநர் ஶ்ரீகாந்த ஒதெலா இயக்குநராக அறிமுகமாகிறார் இப்படத்தில் நானியின் காதலியாக தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.
சத்யன் சூரியன் ISC ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி, சாய் குமார் மற்றும் ஜரீனா வஹாப் ஆகியோர் முக்கியமான பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இப்படத்தில் நவின் நூலி எடிட்டராகவும், அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், விஜய் சாகந்தி நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.
“தசரா” திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
நடிகர்கள் : நானி, கீர்த்தி சுரேஷ், சமுத்திரகனி, சாய் குமார், ஜரீனா வஹாப் மற்றும் பலர்.
தொழில்நுட்பக் குழு:
இயக்கம் – ஸ்ரீகாந்த் ஒதெலா
தயாரிப்பு – சுதாகர் செருக்குரி
தயாரிப்பு நிறுவனம் – ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ்
ஒளிப்பதிவு – சத்யன் சூரியன் ISC
இசை – சந்தோஷ் நாராயணன்
எடிட்டர் – நவின் நூலி
தயாரிப்பு வடிவமைப்பாளர் – அவினாஷ் கொல்லா
நிர்வாகத் தயாரிப்பாளர் – விஜய் சாகந்தி
சண்டைப்பயிற்சி – அன்பறிவு
மக்கள் தொடர்பு – வம்சி-சேகர், சதீஷ்குமார் AIM.