நடிகர் ஜெய்யின் ‘வீரபாண்டியபுரம்’ படத்தின் அடுத்த அப்டேட் – படக்குழு பகிர்ந்த தகவல்

0
209

நடிகர் ஜெய்யின் ‘வீரபாண்டியபுரம்’ படத்தின் அடுத்த அப்டேட் – படக்குழு பகிர்ந்த தகவல்

நடிகர் ஜெய்யின் ‘வீரபாண்டியபுரம்’ படத்திற்கான சென்சார் பணிகள் முடிவடைந்து, தற்போது சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக படக்குழு தகவல் தெரிவித்துள்ளது.

நடிகர் சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படத்திற்குப் பிறகு, இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், ஜெய்யின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வீரபாண்டியபுரம்’. இந்தப் படத்தில் ஜெயப்பிரகாஷ், பாலசரவணன், காளி வெங்கட், மீனாக்ஷி கோவிந்தராஜன், ஆகன்ஷா சிங் ஆகியோர் நடித்துள்ளனர்.

படத்தில் ஹீரோவாக நடிப்பதுடன் படத்தின் இசையையும் வடிவமைத்துள்ளார் நடிகர் ஜெய். ‘சுப்ரமணியபுரம்’ படத்திற்குப் பிறகு அதே கெட்டப்புடன் இவரை இந்தப் படததில் பார்க்க முடிகிறது. முன்னதாக இந்தப் படத்திற்கு ‘சிவ சிவா’ என்று பெயரிடப்பட்ட நிலையில், படத்தைப் பார்த்த நண்பர்களின் கோரிக்கைக்கு ஏற்ப, தயாரிப்பாளர் சம்மதத்துடன் ‘வீரபாண்டியபுரம்’ என்ற தலைப்பை தேர்வு செய்துள்ளோம் என்று இயக்குநர் சுசீந்திரன் சமீபத்தில் தெரிவித்திருந்தார். அதன்படி, படத்தின் தலைப்பும் ‘வீரபாண்டியபுரம்’ என்று மாற்றப்பட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தப் படத்தின் ட்ரெயிலரை நடிகர்கள் சிம்பு, விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், ஆர்யா உள்ளிட்ட 10 பிரபலங்கள் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து வெளியிட்டு இருந்தனர். இந்நிலையில் இந்தப் படத்திற்கு யு/ஏ சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் படம், திரையரங்குகளில், வரும் பிப்ரவரி 18-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்தப் படத்தின் ரன்னிங் நேரம் 119 நிமிடங்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.