நடிகர் சூர்யா ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டும் ஜெய் பீம் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது

0
132

நடிகர் சூர்யா ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டும் ஜெய் பீம் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது

நீதிமன்ற வழக்காடலைக் களமாகக் கொண்ட ஜெய் பீம் திரைப்படத்தின் சர்வதேச வெளியீட்டை முன்னிட்டு, அமேசான் ப்ரைம் வீடியோ தளம், கண் கவரும் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளது.

இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் தீபாவளியை முன்னிட்டு, 2 நவம்பர் 2021 அன்று ஜெய் பீம் வெளியாகிறது. இந்தப் படத்தை டிஜே ஞானவேல் எழுதி இயக்கியுள்ளார். சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் 2டி எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் தயாரித்துள்ளனர்.

அதிக எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கும் இந்தத் திரைப்படத்தை இன்னும் அதிகம் எதிர்பார்க்க வைக்கும் ஒரு விஷயம், இதில் நாயகனாக, வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடிப்பதே.

இந்த மோஷன் போஸ்டர், படத்தின் களம் எதைப் பற்றியது என்பதற்கான ஆழமான ஒரு முன்னோட்டத்தைத் தருகிறது. உயர்ந்த ஆளுமைகளின் உருவப்படங்கள் நிறைந்திருக்கும் நீதிமன்றத்தைச் சுற்றிய ஒரு மெய்நிகர் பயணத்தை இது காட்டுகிறது. மேலும் இந்தப் படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் பற்றிய ஒரு பார்வையையும் இந்த போஸ்டர் காட்டுகிறது.

தீபாவளிக்கு வெளியாகும் இந்தப் படத்தைக் காணக் காத்திருக்கும் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகம் தூண்டும் விதமாக இந்த போஸ்டர் அமைந்துள்ளது.

பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன் மற்றும் லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளம் நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஷான் ரால்டன் இசையமைக்கிறார். ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் இணைதயாரிப்பை கவனிக்கிறார்.

நவம்பர் 2ஆம் தேதி, , தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஜெய் பீம் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது.