நடிகர் சிவகார்த்திகேயன் இன்று சென்னை எக்மோரில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தை பார்வையிட்டார்
”போலீஸ் ஆகவேண்டும் என்று லட்சியமுடையவர்கள் காவலர் அருங்காட்சியகத்தை பார்வையிட வேண்டும்” என்று நடிகர் சிவகார்த்திகேயன் கூறியிருக்கிறார்.
சென்னை எழும்பூரில் உள்ள காவலர் அருங்காட்சியகத்தை பார்வையிட்டப்பின் நடிகர் சிவகார்த்திகேயன் பத்திரிகையாளர்களிடம் பேசினார். அப்போது, ”போலீஸ் ஆகவேண்டும் என்று லட்சியமுடையவர்கள் காவலர் அருங்காட்சியத்தை பார்வையிட வேண்டும். நானும் ஒரு போலீஸ் குடும்பத்தில் இருந்து வந்தவன் என்பதால் அதில் ஆர்வம் அதிகம்” என்று கூறியிருக்கிறார்.