தோல்வியோ வெற்றியோ சினிமா பின்னால் ஓடிக்கொண்டே இருப்பான் நந்தா – இயக்குநர் லிங்குசாமி

0
302

தோல்வியோ வெற்றியோ சினிமா பின்னால் ஓடிக்கொண்டே இருப்பான் நந்தா – இயக்குநர் லிங்குசாமி

நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் இயக்குநர் சேரன் இணைந்து நடிக்கும் “ஆனந்தம் விளையாடும் வீடு” தமிழில் நீண்ட இடைவேளைக்கு பிறகு பெரும் நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க குடும்ப படமாக உருவாகியுள்ளது. இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கியுள்ள இப்படத்தை ஶ்ரீ வாரி ஃபிலிம் தயாரிப்பாளர் P.ரங்கநாதன் பிரமாண்டமான பட்ஜெட்டில் தயாரித்துள்ளார். 40 க்குமேற்பட்ட முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கிறார்கள். படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து படம் வெளியீட்டுக்கு தயாரகியுள்ளது. இன்று படகுழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் கலந்து கொள்ள பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் இப்படத்திம் இசை வெளியீட்டு விழா கோலகலமாக நடைபெற்றது.

இந்த விழாவில் இயக்குநர் லிங்குசாமி பேசும்போது …

என்னுடைய ஆனந்தம் படத்திற்கு முதலில் வைத்த தலைப்பு ஆனந்தம் விளையாடும் வீடு தான். அப்போது இந்த டைட்டிலை சேரன் சார் வைத்திருந்தார். அவர் நடிப்பதற்காக வைத்திருப்பதாக சொன்னார். பின் ஆனந்தம் என வைத்தோம். அன்று அவர் நடிப்பதாக சொன்னது இன்று நடந்திருக்கிறது. ஆனந்தம் திரைக்கதை வளர நந்தா தான் காரணம். தோல்வியோ வெற்றியோ சினிமா பின்னால் ஓடிக்கொண்டே இருப்பான் நந்தா. அவருக்கு வாய்ப்பு கொடுத்து இந்தப்படத்தை உருவாக்கிய தயாரிப்பாளருக்கு நன்றி. சினேகன் வரிகள் எனக்கு மிகவும் பிடிக்கும். இப்படத்தில் அறிமுகமாகும் ஷ்வாத்மிகாவுக்கு வாழ்த்துக்கள். இந்த படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.