தோனியை இயக்கப்போகிறேன் – கொண்டாட்டத்தில் விக்னேஷ் சிவன்

0
100

தோனியை இயக்கப்போகிறேன் – கொண்டாட்டத்தில் விக்னேஷ் சிவன்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக இருப்பவர் விக்னேஷ் சிவன். அவர், சிம்புவை வைத்து போடா போடி, விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்த நானும் ரவுடிதான், சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தற்போது விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கியுள்ளார். அந்தப் படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.

இதற்கிடையில் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் சேர்ந்த ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்திவருகின்றனர். விக்னேஷ் சிவன், தோனியின் மிகப் பெரிய ரசிகர். ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறும் தருணங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், தோனிக்கும் பெரிய அளவில் ஆதரவைத் தெரிவிப்பார். அவரை ரோல் மாடலாக கொண்டுள்ளதாக பல இடங்களில் தெரிவித்துள்ளார். சமீபத்தில் விஜய், தோனி சந்திப்பின் நெல்சன் உடன் இருந்த புகைப்படத்தை பகிர்ந்து தனக்கு இந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்று வருத்தத்தைப் பகிர்ந்திருந்தார்.

அவருக்கு அதைவிட அட்டகாசமான வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆம், அவர் தோனியை இயக்கவுள்ளார். பத்து அணிகளுடன் இந்த ஆண்டு பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள ஐ.பி.எல் போட்டிகள் ஏப்ரல் மாதத்தில் தொடங்கவுள்ளது. இந்தநிலையில், சென்னை அணிக்கான விளம்பரப் படத்தை இயக்கும் வாய்ப்பு விக்னேஷ் சிவனுக்கு கிடைத்திருக்கும் என்று தெரிகிறது. தோனியும் விக்னேஷ் சிவனும் பரஸ்பரம் பூங்கொத்தைக் கொடுத்து வரவேற்றுக்கொள்கின்றனர்.

https://www.instagram.com/p/CaMJSb8P7N1/

பின்னணியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேனர் உள்ளது. எனவே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான விளம்பரத்தை விக்னேஷ் சிவன் இயக்கும் வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு ஐ.பி.எல்லின் போதும் சென்னை சூப்பர் கிங்ஸ் தயாரிக்கும் விளம்பரங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.