தொரட்டி பட கதாநாயகன் கொரோனா தொற்றுக்கு பலி

0
201

தொரட்டி பட கதாநாயகன் கொரோனா தொற்றுக்கு பலி

சென்னை: நாட்டில் கொரோனா பாதிப்புகளால் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களில் சிலர் உயிரிழந்தும் உள்ளனர். இந்நிலையில், கொரோனா 2வது அலை தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

இதில் வயது வித்தியாசமின்றி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

இந்நிலையில், சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்ட தொரட்டி என்ற தமிழ் திரைப்படத்தின் கதாநாயகன் மற்றும் தயாரிப்பாளரான ஷமன் மித்ரு தனிமைப்படுத்தி கொண்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார்.

அவருக்கு வயது 43. சென்னை திரைப்பட கல்லூரியில் படித்து தங்க பதக்கம் வென்ற மாணவரான அவர் தமிழ், தெலுங்கு , கன்னட படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தாலும் தன்னை முழுமையாக அடையாளப்படுத்தி கொள்ள தொரட்டி படத்தை தயாரித்து கதாநாயகனாக நடித்து வெற்றி பெற்றவர் அடுத்த படத்திற்கான வேலைகளை துவங்கிய நேரத்தில் மரணமடைந்தது வருத்தத்திற்குரியது
அவருக்கு சகுந்தலா என்ற மனைவியும் , மோக்‌ஷா என்று 5 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். சொந்த ஊர் காரைக்குடி, சிங்கம்புணரி.