தேசிய திரைப்பட விருதுகள்: நடிகர் ரஜினிகாந்துக்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருது
புதுடெல்லி, 2019 ஆம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா வரும் 25 ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் திரைப்பட விருதுகளில் மிக உயரிய விருதாக கருதப்படும் ‘தாதா சகேப் பால்கே’ விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட உள்ளது.
ஏற்கனவே இந்த விருது குறித்து அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக விழா நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் வரும் 25 ஆம் தேதி நடைபெற உள்ள விழாவில் தேசிய விருது பெற்ற கலைஞர்களுக்கும் விருது வழங்கப்பட உள்ளது. இதன்படி நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், நடிகர் விஜய்சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதும் வழங்கப்பட உள்ளது.