தெலுங்கில் ரீமேக்காகும் வேதாளம்…. ஹீரோ யார் தெரியுமா?

0
246

தெலுங்கில் ரீமேக்காகும் வேதாளம்…. ஹீரோ யார் தெரியுமா?

வேதாளம் திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட இருப்பதாகவும், அஜித் கேரக்டரில் பிரபல நடிகர் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், லட்சுமி மேனன், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்து கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் வேதாளம்.

தமிழில் வெற்றி பெற்ற இந்தப் படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட இருப்பதாக நீண்டகாலமே தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, வேதாளம் தெலுங்கு ரீமேக்கில் முன்னணி நடிகர் சிரஞ்சீவி நடிக்க இருப்பதாகவும், ‘பில்லா’ படத்தை தெலுங்கில் ரீமேக் செய்த மெஹர் ரமேஷ் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

‘லூசிபர்’ ரீமேக்கில் நடித்து வரும் சிரஞ்சீவி அடுத்து நடிக்கப்போகும் படமாக வேதாளம் தெலுங்கு ரீமேக் இருக்கும் என்றும், சிரஞ்சீவியின் பிறந்தநாளன்று இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.