தெய்வீக குரலால் உலக மக்களை தன்வசம் வைத்தவர் லதா மங்கேஷ்கர் – இளையராஜா வேதனை

0
46

தெய்வீக குரலால் உலக மக்களை தன்வசம் வைத்தவர் லதா மங்கேஷ்கர் – இளையராஜா வேதனை

இந்தி திரைப்பட உலகின் மூத்த பாடகி லதா மங்கேஷ்கர் (வயது 92) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

கடந்த சில தினங்களாக லதா மங்கேஷ்கரின் உடல்நிலை கவலைக் கிடமாகவே இருந்தது. தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலையை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், நேற்று அவரது உடல்நிலை சற்று சீரடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இன்று காலையில் லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்தது அவர் காலமானார். இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தி வந்தனர். இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா அவர்கள் லதா மங்கேஷ்கரின் மறைவிற்கு ஒரு வீடியோ பதிவின் மூலம் அவருடைய அஞ்சலியை உருக்கமாக வெளிப்படுத்தியுள்ளார்.