துல்கர் சல்மானின் “குருப்” டீஸர்!

0
247

துல்கர் சல்மானின் “குருப்” டீஸர்!

துல்கர் சல்மான், மொழி தாண்டி அனைத்து நெஞ்சங்களையும் கவர்ந்த அற்புத நடிகர். இளைஞிகளின் கனவு நாயகனாக காதல் செய்வதாகட்டும், அட்வெஞ்சர் கதைகளாகட்டும், அடுத்த வீட்டு பையன் தோற்றமாகட்டும், இல்லை அழுத்தமான கதை பாத்திரங்களாகட்டும் அனைத்திலும் துள்ளலான நடிப்பை தந்து அனைவரையும் மிரள செய்கிறார் துல்கர் சல்மான். அடுத்ததாக சுகுமாரன் குரூப் பாத்திரத்தில் அவர் அசத்தும் “குருப்” படத்தின் டீஸர் நேற்று மாலை வெளியானது. 70 நொடிகள் கொண்ட இந்த டீஸர் வெளியான வேகத்தில் இணையத்தில் தீயாக பரவி, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. முழு இந்திய நாயகனாக இந்தியா முழுக்க ரசிகர் பட்டாளம் வைத்திருப்பதால் இந்தியா முழுக்கவும் வரவேற்பை குவித்திருக்கிறது இந்த டீஸர். அசத்தலான ஒளிப்பதிவு, பரபரக்கும் படத்தொகுப்பு, பிரமாண்ட மேக்கிங் என படத்தின் ஒவ்வொரு சிறு விசயமும், ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.

ALSO READ:

An adventurous hero Dulquer Salmaan’s Kurup Teaserப்” டீஸர்!

“குருப்” திரைப்படம் தமிழ், இந்தி, மலையாளம், மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தில் ஷோபிதா துலிபலா, இந்திரஜித் சுகுமாரன், ஷைன் டாம் சாக்கோ, ஷன்னி வேய்ன், டொவினோ தாமஸ், ஷிவஜித், பத்மனாபன், சுதீஷ், அனுபமா பரமேஸ்வரன், விஜயராகவன் சுரபி லக்‌ஷ்மி, கிரிஷ், குஞ்சன், சாதிக் மற்றும் பரத் ஆகியோர் நடித்துள்ளனர்.

“குருப்” படத்தினை இயக்குநர் ஶ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கியுள்ளார். நிதின் K ஜோஷ் கதையினை எழுதியுள்ளார். திரைக்கதை மற்றும் வசனத்தை டேனியல் சயூஜ் நாயர் & KS அரவிந்த் இணைந்து எழுதியுள்ளனர். Wayfarer Films & M Star Entertainments இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளார்கள். நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்ய, விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்துள்ளார். சுஷின் ஸ்யாம் இசை பின்னணி கோர்ப்பை செய்துள்ளார். வினி விஸ்வா லால் கிரியேட்டிவ் இயக்குநராக பணியாற்றியுள்ளார். பங்லன் கலை இயக்கம் செய்ய, விக்னேஷ் கிஷன் ராஜேஷ் ஒலி வடிவமைப்பு செய்துள்ளார். ரோனக்ஸ் சேவியர் மேக்கப் பணிகள் செய்ய, பிரவீன் வர்மா உடை வடிவமைப்பு செய்துள்ளார். தீபக் பரமேஸ்வரன் புரடக்சன் கண்ட்ரோலராக பணியாற்றியுள்ளார்.