தில் தோட் கே பாடல் மூலம் அனைவரையும் கவர்ந்த ஐஏஎஸ் அதிகாரி

0
329

தில் தோட் கே பாடல் மூலம் அனைவரையும் கவர்ந்த ஐஏஎஸ் அதிகாரி

பிரபல கலைஞர் பி.ப்ராக் பாடிய ‘தில் தோட் கே’ என்ற பாடல் அதனுடைய வியக்கவைக்கும் இசையாலும் அழகிய வரிகளாலும் அனைவரையும் கவர்ந்து வருகிறது. இந்த வீடியோ வெளியான நான்கு நாட்களிலேயே 25 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். இதன் முழுமையான புகழும் ஐஏஎஸ் அதிகாரி மற்றும் திறமையான நடிகர் அபிஷேக் சிங்கையே சேரும், ஏனெனில் அதில் அவருடைய பிரமிக்க வைக்கும் நடிப்பு மக்களைப் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுகிறது.

இந்த ஐஏஎஸ் அதிகாரியின் முழுமையான நடிப்புத் திறனும், மக்களை எளிதாக உணர்ச்சி வசப்பட வைக்கும் திறனும் பல ரசிகர்களை ஈர்த்து இவரை புகழ வைத்துள்ளது.

தன்னுடைய குறும்படமான சார் பந்த்ரா என்ற படத்தின் மூலம் அருமையான நடிப்பு திறனையும், தன்னுடைய ரொமான்டிக் பக்கத்தையும் வெளிக்காட்டியிருந்த ஐஏஎஸ் அதிகாரி அபிஷேக் சிங், தன்னை ஒரு சிறந்த நடிகராக மீண்டும் நிரூபித்துள்ளார்.

தில் தோட் கே பாடல் வெளியானதிலிருந்து இவருக்கு மீண்டும் புகழ் மழை பொழிகிறது. இதயத்துடிப்பின் வலியை கையாளும் ஒரு ஆற்றல் நிறைந்த நடிப்பை அபிஷேக் சிங் வழங்குவதால் ரசிகர்கள் அவருடைய கண்களில் உள்ள தீவிரத்தை ரசிக்கின்றனர். மேலும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி சிறந்த நடிகராகவும் இருப்பது மக்களை ஈர்த்து வருகிறது.

அபிஷேக் சிங்கின் இந்த தத்துவ பாடல் அனைத்து இசை ரசிகர்களையும் கவர்ந்து வருகிறது என்பது சந்தேகமில்லை, இதில் அவர் தன்னுடைய தோற்றத்திற்கு ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.

இந்த பயணத்தில் அவர் நீண்ட தூரம் செல்லவிருகின்றார் என்பது உறுதியாக தெரிகிறது. மேலும் நெட்ஃப்ளிக்சில் வெளிவர இருக்கும் டெல்லி கிரைம் 2 என்ற தொடரில் அவரை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.