திரைப்பட நடிகர் மோகன் குமார் அரசியலில் களமிறங்குகிறார்

0
233

சில ஆண்டுகளுக்கு முன்பு “நெறி” எனும் படத்தை தயாரித்து கதாநாயகனாக நடித்தவர் மோகன் குமார். இப்படம் அந்நேரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு அனைவரின் பாராட்டையும் பெற்றது.

கோவிட் – 19 பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அறக்கட்டளைகள் மூலமாக உணவு, உடை மற்றும் அத்தியாவசிய தேவைகளை செய்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

அநாதை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கி கிராமப்புற ஏழை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் வேலை வாய்ப்பு பெறுவதற்கு வழிவகை செய்துள்ளார். விவசாயிகளுக்கு தாட்கோ மற்றும் வங்கி கடன் வாங்கி கொடுத்து விவசாயிகளின் நன்மதிப்பை பெற்ற இவர் பல லட்சம் செலவில் அன்னதான கூடம் கட்டி உணவின்றி இருக்கும் பல ஏழை மக்களுக்கு பசியாற்றி வருகிறார்.

இவரது சமூக சேவைகளை அனைத்து அமைப்புகளும் வியந்து பாராட்டியுள்ளன.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தான் சார்ந்துள்ள தி.மு.கழகம் சார்பில் கிராமசபை கூட்டம்,பொதுக்கூட்டங்களை நடத்தி மூத்த தலைவர்களின் அன்பையும் பாராட்டையும் பெற்றுள்ளார் நடிகரும் தயாரிப்பாளருமான மோகன் குமார்.

வெங்கட் பி.ஆர்.ஓ