திருமண நாளன்று கணவரை முத்தமிட்டபடி ரொமாண்டிக்கான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பானு

0
260

திருமண நாளன்று கணவரை முத்தமிட்டபடி ரொமாண்டிக்கான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பானு

தமிழில் ஹரி இயக்கத்தில் வெளியான தாமிரபரணி படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் பானு.

நடிகை பானு மலையாளத்தில் முக்தா என்ற பெயரில் அறியப்படுகிறார்.

தமிழில் பொன்னர் சங்கர், அழகர் மலை, சட்டப்படி குற்றம் உள்ளிட்ட படங்களில் நடித்த பானு, மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

திரைப்படங்கள் மட்டுமல்லாது மலையாள சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

கடந்த 2015-ம் ஆண்டு ரிங்கு டோமி என்பவரை பானு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகள் இருக்கிறார்.

இந்நிலையில் தனது 5-ம் ஆண்டு திருமண தினத்தை முன்னிட்டு தனது கணவருக்கு முத்தமிடும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.