திட்டம் இரண்டு விமர்சனம்

0
151

திட்டம் இரண்டு விமர்சனம்

திருச்சியிலிருந்து சென்னைக்கு மாற்றலாகி வரும் போலீஸ் அதிகாரி ஐஸ்வர்யா ராஜேஷ். பேருந்தில் பயணிக்கும் போது சுபாஸ் செல்வத்தின் நட்பு காதலாக மாறுகிறது. இதனிடையே பணியில் சேர்ந்தவுடன் காணாமல் போன உயிர் தோழியான அனன்யாவை கண்டுபிடிக்கும் வழக்கை ஐஸ்வர்யா ராஜேஷிடம் ஒப்படைக்கின்றனர். அனன்யாவை தேடும் போது தான் அவர் இறந்தாக தகவல் கிடைக்க, அதனை விசாரிக்கும் போது கொலையாக இருக்குமோ என்ற கோணத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் விசாரணையை முடிக்கி விடுகிறார். அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள், திருப்பங்கள் வழக்கையே வேறு திசையில் கொண்டு சென்று விடுகிறது. இறுதியில் ஐஸ்வர்யா ராஜேஷ் தன் தோழியின் கொலைக்கு காரணமானவர்களை கண்டுபிடித்தாரா? கொலைக்கான காரணம் என்ன? ஐஸ்வர்யாவின் காதல் கை கூடியதா? என்பதே திருப்புமுனை முடிவு.

இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் இயல்பான போலீஸ் அதிகாரியாகவும், தோழியாக அனன்யா, ஐஸ்வர்யா ராஜேஷின் காதலராக சுபாஷ் செல்வம், பாவல் நவகீதன், ஜீவா ரவி, கோகுல் ஆனந்த், முரளி ராதாகிருஷ்ணன் ஆகியோர் தேர்ந்த நடிப்பால் மனதில் நிற்கிறார்கள்.

கோகுல் பினாய்pன் ஒளிப்பதிவும், சதீஷ் ரகுநாதனின் இசையும் த்ரில்லர் படத்திற்கான திகிலும், த்ரில்லும் நிறைந்த  காட்சிக் கோணங்களுக்கு உயிர் கொடுத்துள்ளனர்.

இவர்களுடன் எடிட்டர் பிரேம் குமார்,கலை இயக்குனராக ராகுல் சிறப்புடன் பணியாற்றியுள்ளனர்.

மர்மம் நிறைந்த கொலையை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரி, அதில் நட்பு, காதலோடு திடுக்கிடும் சம்பவங்களாக கொடுத்து யூகிக்க முடிந்தவாறு கொண்டு சென்று க்ளைமேக்ஸில் திருப்பங்களை கொடுத்து அசர வைத்துள்ளார். முதல் படத்தில் முத்திரை பதித்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்.

மொத்தத்தில்  சிக்ஸர் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம், மினி ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தினேஷ் கண்ணன், வினோத் குமார் ஆகிய இருவரின் தயாரிப்பில் வெளி வந்துள்ள திட்டம் இரண்டு திகட்டாத த்ரில்லர் விருந்து.