திட்டமிட்டபடி ஏப்.14இல் வெளியாகிறது ’பீஸ்ட்’ திரைப்படம் – விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகிறது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் பீஸ்ட் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவதாக இருந்தது. ஆனால் படப்பிடிப்பு நிறைவடையாததால் ஏப்ரல் 14ஆம் தேதி திரைப்படம் வெளியாகும் என தகவல்கள் வெளியாகின. ஆனால், பீஸ்ட் படத்தின் இறுதிகட்ட பணிகள் முடிய நாட்களாகும் எனவும், அதேசமயம் கே.ஜி.எஃப்-2 படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாவதால் பீஸ்ட் வெளியீட்டு தேதியை மாற்றியுள்ளனர் எனவும் தகவல்கள் பரவி வந்தன.
இந்த நிலையில் பீஸ்ட் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டப்படி ஏப்ரல் 14ம் தேதி வெளியிட முடிவெடுத்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் அறிவிக்க உள்ளனர். இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, இயக்குனர் செல்வராகவன், ஷைன் டாம் சாக்கோ, யோகி பாபு, விடிவி கணேஷ் மற்றும் அபர்ணா தாஸ் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.