தாறுமாறாக ட்ரெண்டாகும் தப்பாட்டம் : தனது தப்பாட்டம் பட போஸ்டரை உலக ஃபேமஸ் ஆக்கியதற்கு எலான் மஸ்க்குக்கு நன்றி தெரிவித்த நடிகர் துரை சுதாகர்

0
168

தாறுமாறாக ட்ரெண்டாகும் தப்பாட்டம் : தனது தப்பாட்டம் பட போஸ்டரை உலக ஃபேமஸ் ஆக்கியதற்கு எலான் மஸ்க்குக்கு நன்றி தெரிவித்த நடிகர் துரை சுதாகர்

உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க், ட்விட்டரை கைப்பற்றியதிலிருந்து பல எடக்குமொடக்கான ட்வீட்களை போட்டு இணைய உலகத்தை உலுக்குவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் ஆப்பிள் நிறுவனமும் ஓபன் ஏஐ நிறுவனமும் கைக்கோற்பதாகத் தகவல்கள் வெளியாகின. அதை உறுதி செய்யும் விதமாக அண்மையில் ஆப்பிள் சாதனங்களில் இனிமேல் ஓபன் ஏஐ டூல்களைப் பயன்படுத்தலாம் என ஆப்பிள் CEO டிம் குக் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.

இதைக் கண்டிக்கும் விதமாக டெஸ்டா நிறுவனர் எலான் மஸ்க் தனது X தளத்தில் பல்வேறு கருத்துகளையும் மிம்ஸ்களையும் பகிர்ந்து வருகிறார். அதில், “ஓபன் ஏஐ மிகவும் ஆபத்தான ஒன்று. ஆப்பிள் நிறுவனம் அதனுடன் கூட்டு சேர்வது சரியான முடிவு அல்ல. மேக்புக், ஐபோன், ஐபாட் உள்ளிட்ட ஆப்பிள் சாதனங்களில் ஓபன் ஏஐ டூல்களுக்கு அனுமதி கொடுத்தால் பயனர்களின் தரவுகள் திருடப்படும். பயனர்களின் பெயர் முதல் வங்கி கணக்கு தரவுகள் வரை அனைத்தையும் ஏஐ தெரிந்துகொள்ளும். ஆப்பிள் சாதனங்களில் ஓபன் ஏஐ டூல் (Open AI) பயன்பாட்டுக்கு வந்தால் அந்த சாதனங்களை எனது நிறுவனங்களில் பயன்படுத்த தடை விதிக்கப்படும். எனது நிறுவனத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய நிச்சயம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என தெரிவித்துள்ளார்.

இதுமட்டுமின்றி ஆப்பிள் – ஓபன் ஏஐ நிறுவனங்களை கேலி செய்யும் வகையில் ‘தப்பாட்டம்’ என்ற தமிழ் படத்தின் மீமையும் பகிர்ந்துள்ளார். இந்த மீம் தற்போது இணைய உலகில் வைரலாகி வருகிறது. ‘தப்பாட்டம்’ படத்தில் நாயகனும் நாயகியும் இளநீரில் ஸ்ட்ரா போட்டு குடிக்கும் போஸ்டர் தான் அது.  2017ம் ஆண்டு முஜிபிர் ரஹ்மான் இயக்கத்தில் வெளியான இப்படம் நாட்டுப்புற கலையான ‘பறை’ குறித்தும் கணவன் மனைவிக்குள் சந்தேகம் வந்தால் ஏற்படும் விளைவுகளை என்பதையும் மையமாக வைத்தும் எடுக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் ட்ரெண்ட் ஆன இந்த மீம் குறித்து பேட்டியளித்துள்ள அப்படத்தின் நாயகன் துரை சுதாகர், காலையில் இருந்தே போன்கால்ஸ் வந்துகொண்டே இருக்கிறது. தப்பாட்டம் படம் என்னுடைய முதல் படம். சின்ன வயதில் இருந்தே நான் பார்த்து வளர்ந்த பல விஷயங்களை அதில் சொல்லி இருந்தோம். குறிப்பாக தப்பாட்டம் என்று சொல்லப்படும் பறை இசைக் கலை பற்றியும் எவரோ சொல்வதை எண்ணி ஒரு பெண் மீது அவதூறு சொல்வதால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் சொன்ன படம். தப்பாட்டம் படம் எனக்கு நல்ல நண்பர்களை சினிமாவிற்குள்ளும் சினிமாவிற்கு வெளியேயும் கொடுத்தது. அதன் விளைவால் தான் களவாணி 2, பட்டத்து அரசன் உள்ளிட்ட படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இன்று எலான் மாஸ்க் அந்த படத்தின் ஸ்டில்லை பகிர்ந்து எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளார். இந்த படத்தை எலான் மாஸ்க் பகிர்ந்திருந்தாலும் அந்த பெருமை எல்லாம் அவர் வரைக்கும் இதைக் கொண்டு சேர்த்த ரசிகர்களையே சேரும். எலான் மாஸ்க், அவரிடம் கொண்டு சேர்த்த தமிழ் சினிமா ரசிகர்கள், சமூக வலைதளவாசிகள், பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் என அனைவருக்கும் என் நன்றிகள். நல்ல படைப்புகளில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறேன். இன்னும் சில கதைகள் கேட்டு இருக்கிறேன். உங்கள் ஆதரவு எப்போதும் எனக்கு இருக்கும் என நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

https://x.com/elonmusk/status/1800272349134279011