தயாரிப்பாளர் சங்க தேர்தலில் டி.ராஜேந்தர் தலைவர் பதவிக்கும் மன்னன் செயலாளர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர்

0
218

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் டி.ராஜேந்தர் தலைவர் பதவிக்கும் மன்னன் செயலாளர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர்

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் திரு. டி.ராஜேந்தர் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். மன்னன் பிலிம்ஸ் திரு.மன்னன் செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறார். இவரது அணியில் இடம்பெறும் மற்ற நபர்கள் பற்றிய விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் எனக்கு தாய் வீடு. வரும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு நான்போட்டியிடுகிறேன். என்னுடன் மன்னன் செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறார் என்று டி.ராஜேந்தர் கூறினார்.

மேலும் 7 மாதங்களுக்கும் மேலாக முடிக்கிடக்கும் திரையரங்குகளை 50 சதவிதம் பார்வையாளர்களுடன் அனுமதிக்கலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது. பல நாட்களுக்கு பிறகு திறக்கப்படும் திரையரங்கு டிக்கேட்களுக்கு விதிக்கப்படும் 12% GST வரியை நமது பாரத பிரதமர் ரத்து செய்ய  வேண்டும் என்றும் தண்ணீர் இல்லாத தாமரை போல் வாடும் இந்திய திரையுலகை வாழ வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். மேலும் தமிழக முதல்வருக்கு 8%  கேளிக்கை (LBT) வரியை ரத்து செய்யுமாறு கோரிக்கை வைத்தார்.

உலகம் முழுவதும் VPF (Virtual Print Fee கட்டணம் ரத்தாகி இரண்டு ஆண்டுகளாகிறது. ஆனால் நமது இந்திய நாட்டில் மட்டும் இந்த கட்டணம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த கட்டணம் முழுவதுமாக நிறுத்தப்பட வேண்டும் என்று கூறினார்.