தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் : கமல் – ரஜினி வாக்களித்தனர்

0
435

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் : கமல் – ரஜினி வாக்களித்தனர்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2023 – 2026 ஆம் ஆண்டுக்கான தேர்தல் சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஜானகி ராமச்சந்திரன் கலைக் கல்லூரியில் நடைபெற்றது. காலை 9 மணிக்கு துவங்கிய வாக்குப் பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது.

இந்த தேர்தலில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், ராதாரவி, மோகன், ராமராஜன், நாசர், பாகயராஜ், பூர்ணிமா பாக்யராஜ், எஸ்.வி.சேகர், ஆர்யா, ஸ்ரீகாந்த், சசிகுமார், சின்னி ஜெயந்த் , டெல்லி கணேஷ், விக்னேஷ், விஷ்ணு விஷால், ராதிகா, இயக்குனர்கள் பாரதிராஜா,  ஆர்.கே.செல்வமணி,அமீர், ஆர்.மாதேஸ், எஸ்.ஏ.சந்திரசேகர், கே.ஆர், வேல்முருகன், சித்ராலட்சுமணன், ஷக்தி சிதம்பரம், மனோஜ்குமார், திருமலை, சுரேஷ், சாலை சகாதேவன், மற்றும் தயாரிப்பாளர்கள், எஸ்.தாணு, டி.ஜி.தியாகராஜன், மோகன் நடராஜன், பிரமிட் நடராஜன், சிவசக்தி பாண்டியன், டி.சிவா, ராசாராம், கே.எஸ்.சீனிவாசன், விஸ்வா சுந்தர், பெப்சி விஜயன, கனல் கண்ணன் வெள்ளையன், புகழேந்தி, ஆர்.வி.உதயகுமார், வேதா, கருணாகரன், வெடிமுத்து, மற்றும் தயாரிப்பாளர்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

நாளை(1.5.2023) காலை 9.30 மணியளவில் வாக்கு எண்ணிக்கை துவங்குகிறது. மாலைக்குள் தேர்தல் முடிவுகள் தெரிந்துவிடும் என்று தெரிகிறது.

இதில் முரளி இராமநாராயணன் தலைமையில் ஒரு அணியும் , டி. மன்னன் தலைமையில் ஒரு அணியும் போட்டியிடுகின்றனர். கலைப்புலி.ஜி.சேகரன், சிங்காரவடிவேலவன், ராஜேஷ்வரி வேந்தன், வைராஜாவை., ஆகியோர் சுயேச்சையாக நிர்வாகிகள் பதவிக்கு போட்டியிடுகின்றனர்