தயாரிப்பாளரும், அருண் விஜய்யின் மாமனாருமான என்.எஸ்.மோகன் காலமானார்

0
138

தயாரிப்பாளரும், அருண் விஜய்யின் மாமனாருமான என்.எஸ்.மோகன் காலமானார்

தயாரிப்பாளரும் நடிகர் அருண் விஜய்யின் மாமனாருமான டாக்டர் என்.எஸ் மோகன் உடல்நலக் குறைவால் இன்று உயிரிழந்தார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். இவர் நடித்த வா டீல், மாஞ்சா வேலு, மலை மலை, தடையறத் தாக்க போன்ற படங்களை தயாரித்தவர் என்.எஸ்.மோகன். அருண் விஜய்யின் மாமனாரான இவர், சமீப காலமாக மூச்சுத் திணறல் பிரச்னையால் அவதிப்பட்டு வந்தார்.

இதற்காக சிகிச்சை பெற்றுவந்த டாக்டர் என்.எஸ் மோகன் இன்று உயிரிழந்தார். 68 வயதாகும் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் நெகட்டிவ் என்று வந்துள்ளது. இன்று மாலை டாக்டர் மோகனுக்கு கீழ்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் இறுதிச்சடங்கு செய்யப்படுகிறது.