தமிழ் பிக்பாஸ் சீசன்-4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் கவர்ச்சி கன்னி நடிகை ஷாலு ஷம்மு!

0
2139

தமிழ் பிக்பாஸ் சீசன்-4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் கவர்ச்சி கன்னி நடிகை ஷாலு ஷம்மு!

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி கொரோனா அச்சுறுத்தலால் இந்த வருடம் தள்ளி போகியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான முதல் புரமோ வீடியோ வெளியானது. இது ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது. யாரெல்லாம் போட்டியாளர்களாக வரப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்கள் மத்தியில் எழுந்தது.
ரம்யா பாண்டியன், குக்வித் கோமாளி புகழ், நடிகை கிரண், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் பட ஹீரோயின் ஷில்பா மஞ்சுநாத் ஆகியோர் பெயர்கள் அடிப்பட்டு வருகிறது. இந்நிலையில், றெக்க, மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்த இளம் கவர்ச்சி நடிகை ஷாலு ஷம்மு நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், றெக்க, மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் ஷாலு ஷம்மு. சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ஷாலு ஷம்மு, கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறார்.

விரைவில் தொடங்க இருக்கும் தமிழ் பிக்பாஸ் 4-வது சீசனில் நடிகை ஷாலு ஷம்மு கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்துகொள்வது குறித்து இணைய ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கும் ஷாலு ஷம்மு, இன்னும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது முடிவாகவில்லை என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சிக் குழுவினர் தரப்பில் இருந்து அழைப்பு வந்திருப்பது உறுதியாகிறது. நிகழ்ச்சிக் குழுவின் இறுதி முடிவில் ஷாலு ஷம்மு தேர்வு செய்யப்பட்டால் இந்த சீசனில் அவரை பிக்பாஸ் வீட்டுக்குள் காணலாம்.