தமிழ் – தெலுங்கு – மலையாளம் – கன்னடம் – ஹிந்தி என ஐந்து மொழிகளில் தயாராகியுள்ள பொல்லாப்பு

0
135

தமிழ் – தெலுங்கு – மலையாளம் – கன்னடம் – ஹிந்தி என ஐந்து மொழிகளில் தயாராகியுள்ள பொல்லாப்பு

ஜெஹோவா பிலிம் இண்டர்நேஷனல் என்ற பட நிறுவனம் தமிழ், தெலுங்கு , மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் தயாரித்துள்ள படம் ” பொல்லாப்பு ”

தேவன் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ரித்திகா, ஹர்ஷ்தா பட்டேல் இருவரும் நடித்துள்ளனர்.
மற்றும் சம்பத்ராம், ஆதேஷ் பாலா, பவர் ஸ்டார், கில்மா கிரி, சில்மிசம் சிவா, ராஜன், கவுண்டமணி தினேஷ், தாவுத், சத்யன், நவீந்தர், அன்பழகன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இணை இயக்குனர் – P.R.விஜய்
ஒளிப்பதிவு – R.திருப்பதி
இசை – E.J.ஜான்சன்
பாடல்கள் – Dr. வடுகம் R.சிவகுமார், E.J.ஜான்சன், மோகன் குமார்.
எடிட்டிங் – ப்ரியன்
கலை – அருண்
ஸ்டண்ட் – ஜாகுவார் தங்கம், விஜய் ஜாகுவார்
நடனம் – சஞ்சீவ் கண்ணா
நிர்வாக தயாரிப்பு – P.Y.K.ராஜேஷ் குமார்
மக்கள் தொடர்பு – மணவை புவன்
இணை தயாரிப்பு – A.அன்பழகன், K.S.பிரதீப் ராஜ், R.ரேவதி
தயாரிப்பு – ஜோஸுவா தேவதாஸ்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – தேவன்

இயக்குனரும் நயாகனுமான தேவன் பேசியதாவது..

நேர்மையான ஒரு போலீஸ் அதிகாரியை பற்றிய படம் இது.
அவர் சந்திக்கும் குற்றவாளிகளை தண்டிக்க நினைக்காமல், திருத்த நினைக்கும் ஒரு நேர்மையான காவல் துறை அதிகாரியை, அவரது கடமையை செய்யவிடாமல் எதிற்கும் சமூக விரோதிகளை எப்படி கையாள்கிறார். எதிரிகளால் தனது குடும்பத்தை இழந்தும் எப்படி இந்த சமூகத்திற்கு சிறப்பாக பணியாற்றி தர்மத்தை நிலைநாட்டினார் என்பது படத்தின் திரைக்கதை.
படப்பிடிப்பு சென்னை, ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சனகிரி மலை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. படம் ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக இருக்கிறது.