தமிழில் வெளியாகும் அக்ஷய் குமாரின் பிருத்விராஜ் – போஸ்டர் வெளியீடு

0
103

தமிழில் வெளியாகும் அக்ஷய் குமாரின் பிருத்விராஜ் – போஸ்டர் வெளியீடு

அக்ஷய் குமார் நடித்திருக்கும் சரித்திர திரைப்படம் பிருத்விராஜ். இதனை தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியிடுகின்றனர். தமிழ் போஸ்டரை தற்போது வெளியிட்டு இருக்கிறார்கள்.

இந்தியாவை ஆண்ட பிருத்விராஜ் சவுகான் அரசரைப் பற்றிய திரைப்படம் பிருத்விராஜ். இதில் பிருத்விராஜ் சவுகான் ஆக அக்ஷய் குமார் நடித்துள்ளார். மனுஷி சில்லர் அவரது மனைவியாக நடித்துள்ளார். சஞ்சய் தத் அசுவதோஷ் ராணா, லலித் திவாரி உட்பட ஏராளமானோர் இதில் நடித்துள்ளனர். யாஷ் ராஜ் பிலிம்ஸ் இதனை தயாரித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றால் இந்த வருடம் வெளியாக வேண்டிய திரைப்படங்கள் பலவும் தங்களது வெளியீட்டை தள்ளி வைத்தன. அதில் பிருத்விராஜ் திரைப்படமும் ஒன்று. இப்போது இந்தப் படத்தை ஜூன் 10ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். அக்ஷய் குமாரின் இந்தி திரைப்படங்கள் சென்னை, கோவை போன்ற தமிழக நகரங்களில் ஓரளவு வசூலை பெறும். இப்போது அதையும் தாண்டி அனைத்து தமிழ் அறிந்த ரசிகர்களிடம் படம் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் தமிழில் டப் செய்து வெளியிடுகின்றனர். இந்தியில் படம் வெளியாகும் அதே ஜூன் 10ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் இந்தப் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

மணிரத்னத்தின் சரித்திர படமான பொன்னியின் செல்வன் வெளியாகவிருக்கும் நிலையில் கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் பிருத்விராஜ் திரைப்படத்தையும் தமிழில் வெளியிடுகின்றன. சந்திர பிரகாஷ் திவேதி இயக்கியிருக்கும் பிருத்விராஜ் தமிழக ரசிகர்களை கவருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.