தன்னம்பிக்கை நாயகன் நடிகர் ஆதேஷ்பாலா

0
182

தன்னம்பிக்கை நாயகன் நடிகர் ஆதேஷ்பாலா

இயக்குனர் பாக்யராஜ் அவர்கள் இயக்கத்தில் தொலைக்காட்சித் தொடர் மூலம் நடிகராக அறிமுகமான நடிகர் ஆதேஷ்பாலா சென்னையைச் சேர்ந்தவர். பிரபல காமெடி நடிகர் சிவராமன் – சுப்புலெட்சுமி நட்சத்திர தம்பதிகளின் மகனாவார். இவரது தந்தையார் பிரபல காமெடி நடிகர் சிவராமன் ஆவார்.

தந்தை சிறந்த நடிகராக இருந்த போதும், தனது திறமையால் முன்னுக்கு வந்தவர். தாயை நேசிக்கும் பண்பாளர். தான் ஒரு நடிகன் என்ற சிந்தை இல்லாமல் எல்லோரிடமும் தயக்கமின்றி நண்பனைப்போல் பழகும் ஆதேஷ்பாலா இயக்குனர் விசு  இயக்கத்தில் வெளிவந்த சகலகலா சம்பந்தி, வேடிக்கை என் வாடிக்கை, பெண்மணி அவள் கண்மணி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

சென்னை பிரசிடென்சி கல்லூரியில் B.A., செக்ரட்டரிஷிப் படித்த நடிகர் ஆதேஷ்பாலா,  நடிகர் விக்ரம்  நடித்த சாமி படம் மூலம் தனது நடிப்பு பயணத்தை தொடங்கி முண்டாசுப்பட்டி, கோவில், மண்ணின் மைந்தன், மலைக் கோட்டை, முண்டாசுப் பட்டி, இங்கிலீஷ் காரன், விந்தை, குருவி, வஜ்ரம், இந்திரலோகத்தில் நா. அழகப்பன், ஜன்னலோரம், பேட்ட போன்ற படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் தியாகராஜன் இயக்கத்தில் நடிகர் பிரசாந்த் நடித்த மலையூர் மம்பட்டியான் படத்திலும் சமீபத்தில் திரைக்கு வந்த சாயம் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

பொண்டாட்டி, நிக்குமா நிக்காதா போன்ற குறும்படங்களில் நாயகனாக நடித்திருந்தார். Take 1 shot 1 என்ற குறும்படத்தில் ஒரே ஷாட்டில் நடித்துள்ளார்.

தற்போது இராஜமாபுரம் என்ற படத்தில் கதை நாயகனாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் டான் பாஸ்கோ பள்ளியில் நடைபெற்ற DB MAMA ‘N’ PAPA FIESTA (SEASON 4) விழாவில் திருமதி ராதிகா சரத்குமார், இயக்குநர் பா ரஞ்சித் ஆகியோர் முன்னிலையில் கௌரவிக்கப்பட்டார்.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் தன்னம்பிக்கை நாயகன் நடிகர் ஆதேஷ்பாலாவின் முயற்சிகள் முழு வெற்றி பெற வாழ்த்துவோம்.