தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி மீண்டும் எப்போது உருவாகும்? – வெற்றிமாறன் விளக்கம்

0
201

தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி மீண்டும் எப்போது உருவாகும்? வெற்றிமாறன் விளக்கம்

தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி, தமிழ் சினிமாவின் பிளாக்பஸ்டர் கூட்டணியாக விளங்கி வருகிறது. இவர்கள் கூட்டணியில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் என அனைத்துமே மாஸ்டர் பீஸ் தான்.

கடந்த 2018-ம் ஆண்டு இவர்கள் கூட்டணியில் வெளியாகி வெற்றிபெற்ற படம் வடசென்னை. இப்படத்தின் 2-ம் பாகம் உருவாகும் எனவும் அப்போது அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பு வெளியாகி மூன்று வருடங்கள் ஆகியும், அப்படம் குறித்த அடுத்தக்கட்ட தகவல் எதுவும் வெளியாகவில்லை. இதனால் வடசென்னை 2 உருவாகிறதா, இல்லையா என்கிற குழப்ப நிலை நீடித்து வந்தது.

இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரியை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இதையடுத்து சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை இயக்க உள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் ஒரு விழாவில் கலந்துகொண்டு பேசிய வெற்றிமாறன், வடசென்னை 2-ம் பாகம் இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து உருவாக வாய்ப்புள்ளதாக கூறினார். மேலும் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் பிரமாண்டமாக உருவாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.