தனுஷ் – வெங்கி அட்லூரி – சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் & ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணையும் இருமொழி திரைப்படத்தின் தலைப்பு வாத்தி (தமிழ்) / SIR (தெலுங்கு)

0
196

தனுஷ் – வெங்கி அட்லூரி – சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் & ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணையும் இருமொழி திரைப்படத்தின் தலைப்பு வாத்தி (தமிழ்) / SIR (தெலுங்கு)

பல வெற்றி படங்களை தயாரித்த முன்னணி தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் அடுத்ததாக இரண்டுமுறை தேசிய விருது பெற்ற நடிகர் ‘தனுஷ்’ உடன் இணைந்து ‘வாத்தி’ (தமிழ்) / ‘SIR’ (தெலுங்கு ) என்ற தெலுங்கு மற்றும் தமிழில் புதிய இருமொழித் திரைப்படம் ஒன்றை தயாரிக்கிறது .இன்று இந்த படத்தின் டைட்டில் லுக் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டு சமூக ஊடகங்களில் திரைப்பட ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர் .

சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பு நிறுவனத்திலேயே ராங்டே படத்தை இயக்கிய இளம் இயக்குனர் வெங்கி அட்லூரி இந்த படத்தை இயக்குகிறார் . சூர்யதேவரா நாக வம்சியின் சித்தாரா என்டர்டெயின்மெண்ட்ஸ் இந்தப் படத்தை சாய் சௌஜன்யாவுடன் (ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ்) தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கவுள்ளது.மலையாள நடிகை சம்யுக்தா மேனன் நாயகியாக நடிக்கிறார். சூது கவ்வும், சேதுபதி, தெகிடி, மிஸ்டர் லோக்கல், மாறா போன்ற படங்களில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளர் நவின் நூலி இப்படத்திற்கு படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார் .பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறர் இப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஜனவரி 2022ல் தொடங்குகிறது.

தனுஷ் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். இவர்களுடன் சாய் குமார், தணிகெல்லா பரணி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

எழுத்து & இயக்கம் : வெங்கி அட்லூரி
தயாரிப்பு நிறுவனம் : சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் & ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ்
தயாரிப்பாளர்கள்: நாக வம்சி .S – சாய் சௌஜன்யா
நிர்வாகத் தயாரிப்பாளர்: எஸ். வெங்கடரத்தினம் (வெங்கட்)
தயாரிப்பு வடிவமைப்பாளர்: அவினாஷ் கொல்லா
எடிட்டர்: நவின் நூலி
ஒளிப்பதிவாளர் : தினேஷ் கிருஷ்ணன்
இசை: ஜி.வி.பிரகாஷ் குமார்
வழங்குபவர்: PDV பிரசாத்
மக்கள் தொடர்பு : ரியாஸ் கே அஹ்மத்