ட்விட்டரில் வைரலாகும் விஜய்-யுவன் போட்டோ

0
192

ட்விட்டரில் வைரலாகும் விஜய்-யுவன் போட்டோ

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா இதுவரை விஜய்யுடன் ஒரேயொரு படத்தில்தான் பணியாற்றி இருக்கிறார். ஏ.ஆர் ரஹ்மான், அனிருத் என பலருடன் ரிப்பீட் மோடில் விஜய் பணியாற்றினாலும் யுவன் ஷங்கர் ராஜா – விஜய் கூட்டணியை யுவன் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.
விஜய் போலவே முன்னணி நடிகரான அஜித்தின் ‘தீனா’, ‘பில்லா’, ‘பில்லா 2’, ‘ஏகன்’, ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ என தொடர்ந்து பணியாற்றி வருகிறார் யுவன் ஷங்கர் ராஜா. ஆனால், விஜய் படத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான ‘புதிய கீதை’ படத்தைத் தவிர இதுவரை யுவன் பணியாற்றவில்லை. கடந்த 17 ஆண்டுகளாக இக்கூட்டணி மீண்டும் இணையாததால் ஏக்கத்துடன் காத்துக்கொண்டிருகிறார்கள் விஜய்-யுவன் ரசிகர்கள்.

இந்த நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய்யுடன் உற்சாகமுடன் இருக்கும் புகைப்படத்தை யுவன் ஷங்கர் ராஜா பகிர்ந்திருகிறார். ட்விட்டர் ட்ரெண்டிங்கில் வைரலாகிக்கொண்டு வருகிறது இந்தப் புகைப்படம். அதேசமயம், விஜய்யின் ‘விஜய் 66’ அல்லது ‘விஜய் 67’ படத்தில் யுவன் பணியாற்றுகிறாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.