‘டைனோசர்களும், மனிதர்களும் ஒன்னா வாழமுடியாது’- ‘ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன்’ ட்ரெய்லர்

0
94

‘டைனோசர்களும், மனிதர்களும் ஒன்னா வாழமுடியாது’- ‘ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன்’ ட்ரெய்லர்

டைனோசர்களை மையமாக வைத்து வெளிவரும் ‘ஜுராசிக் வேர்ல்ட்’ பட வரிசையில், அடுத்ததாக ‘ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன்’ ட்ரெயிலர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

1990-கள் முதல் வெளிவரும் ‘ஜூராசிக்’ பட சீரிஸ்க்காகவே தனி ரசிகர் பட்டாளம் உலகம் முழுவதும் உண்டு. முதன்முதலாக ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், இயக்கி, கடந்த 1993-ம் ஆண்டு வெளியான ‘ஜுராசிக் பார்க்’ திரைப்படம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அதிலும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த படமாக இன்றளவும் இருந்து வருகிறது. அதை தொடர்ந்து ‘தி லாஸ்ட் வேர்ல்ட்: ஜுராசிக் பார்க்’, ‘ஜுராசிக் பார்க் 3’ ஆகிய பாகங்களும் வெளியாகின. அதன்பின்னர் நீண்ட ஆண்டுகள் கழித்து, கடந்த 2015-ம் ஆண்டில் ஜுராசிக் பார்க்கின் தொடர்ச்சியாக ‘ஜுராசிக் வேர்ல்ட்’ படங்கள் வெளியாக தொடங்கின.

இந்நிலையில், டைனோசர்கள் மற்றும் டைனோசர்கள் உலகத்தின் முடிவு என்கிற தலைப்பில் உருவாகியிருக்கும், ‘ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது. பல மொழிகளிலும் வெளியாகியுள்ள ‘ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன்’ ட்ரெயிலர் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்தப் படத்தில், முதன்முதலாக வெளிவந்த ‘ஜுராசிக் பார்க்’ படத்தில் நடித்த சாம் நீல், ஜெஃப் கோல்ட்பிளம், லாரா டெர்ன் ஆகியோரும் நடித்துள்ளனர். இதனால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மனிதர்களும், டைனோசர்களும் ஒன்றாக வாழ முடியாது என்ற அடிப்படையில் இந்தப் படம் உருவாகியுள்ளது. பனிமலை பிரதேசத்தில் டைனோசர்கள் வாழ்வது போல், புதிதாக கதை உருவாக்கப்பட்டுள்ளது. ‘ஜூராசிக் வேர்ல்ட் டொமினியன்’ வரும் ஜுன் மாதம் 10-ம் தேதி வெளியாகிறது.