‘டைகர் 3’யின் புதிய புரோமோவில் இந்தியாவை காக்கும் ஒன்மேன் ஆர்மியாக சல்மான் கான்
‘டைகர் 3’யின் டீசர், டிரைலர் மற்றும் லேகே பிரபு கா நாம் பாடல் ஆகியவற்றின் வியத்தகு வெற்றியை தொடர்ந்து டைகர் மீண்டும் திரும்புகிறார் என்பதை அறிவிக்கும் விதமாக 50 வினாடி வீடியோ ஒன்றை யஷ்ராஜ் பிலிம்ஸ் இன்று வெளியிட்டு பார்வையாளர்களை ஆச்சர்யப்படுத்தி உள்ளது. எந்த விலை கொடுத்தேனும் இந்தியாவை அழிக்க நினைக்கும் எதிரிகளுக்கு எதிராக நின்று இந்தியாவை காக்கும் ஒரு ஒன்மேன் ஆர்மியாக சல்மான் கானை அதாவது டைகரை அறிமுகப்படுத்துகிறது.
உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுக்கு பிளாக் பஸ்டர் படங்களை மட்டுமே வழங்கிவருகின்ற யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸின் ‘டைகர் 3’ கட்டாயம் பார்க்கப்பட வேண்டிய கண்கவர் படம். ஏக் தா டைகர், டைகர் ஜிந்தா ஹை, வார் மற்றும் பதான் படங்களை தொடர்ந்து யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் வெற்றிப்படங்களின் வரிசையில் அவற்றின் நிகழ்வுகளுடன் தொடர்பு கொண்ட 5வது படமாக ‘டைகர் 3’ உருவாகியுள்ளது.
இந்த ஆக்சன் புரோமோவில் தீமையின் மொத்த மூளையாக செயல்படுபவனும் படத்தில் சூப்பர் ஏஜென்ட்டான டைகரின் விரோதியுமான இம்ரான் ஹாஸ்மியால் சல்மான் கான் மிரட்டப்படுகிறார். இந்தியாவை இரக்கமற்ற முறையில் துன்புறுத்துவேன் என்றும் இந்தியர்களை வேட்டையாடி வீழ்த்துவேன் என்றும் வெறித்தனமாக அறிவிக்கிறார் இம்ரான் ஹாஸ்மி’.
அடிவயிற்றில் அமிலம் சுரக்க வைக்கும் அந்த வீடியோவை இங்கே பாருங்கள்
https://www.youtube.com/watch?
இந்திய சினிமாவின் மிகப்பெரிய மெகாஸ்டார்களான சல்மான் கான் மற்றும் கத்ரீனா கைப் இருவரும் ‘டைகர் 3’யில் பெருமைமிக்க டைகர் மற்றும் சோயா என்கிற தங்களது சூப்பர் ஏஜென்ட் கதாபாத்திரங்களில் மீண்டும் நடித்திருக்கிறார்கள். ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் மனீஷ் சர்மா இயக்கியுள்ள இந்த ‘டைகர் 3’ இந்த வருடம் நவம்பர்-12ஆம் தேதி ஞாயிறு தீபாவளியில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது