டி.ராஜேந்தர் தலைமையில் மற்றொரு தயாரிப்பாளர் சங்கம்

0
175

டி.ராஜேந்தர் தலைமையில் மற்றொரு தயாரிப்பாளர் சங்கம்

நவம்பர் 22-ஆம் தேதி நடைபெற்ற தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் முரளி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட டி ராஜேந்தர் தோல்வியை சந்தித்தார். இந்த நிலையில் டி ராஜேந்தர் தயாரிப்பாளர்களுக்காக புதிதாக ஒரு சங்கத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்கு தயாரிப்பாளர்கள் பாதுகாப்பு சங்கம் என்றும் அவர் பெயரிட உள்ளார். டிசம்பர் 5-ஆம் தேதி இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டி ராஜேந்தர் அணியில் போட்டியிட்ட சுபாஷ்சந்திரபோஸ் கே ராஜன் உள்ளிட்டோர் புதிய சங்கத்தில் பொறுப்பேற்கிறார்கள். சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வியுற்ற ஜே.எஸ்.கே சதீஷும் இவர்களுடன் இணைகிறார்.

புதிதாக தொடங்கப்பட இருக்கும் சங்கத்திற்கு நிதி திரட்டுவதற்காக சம்பளமே இல்லாமல் நடித்துக் கொடுக்க டி ராஜேந்தரின் மகன் சிலம்பரசன் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

ஏற்கனவே இயக்குனர் பாரதிராஜா தலைமையில் நடப்பு தயாரிப்பாளர் சங்கம் தனியாக செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் டிராஜேந்தர் மற்றொரு சங்கத்தை அமைப்பதால் இதற்கான ஆதரவு எந்த அளவிற்கு இருக்கும் என்பது போகப்போகத்தான் தெரியவரும்.