டிரிப் சினிமா விமர்சனம்
சாய் பிலிம் ஸ்டியோஸ் சார்பில் ஏ.விஸ்வநாதன், ஈ.பிரவீன்குமார் தயாரித்து ட்ரிப் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் டென்னிஸ் மஞ்சுநாத்.
யோகி பாபு,கருணாகரன், சுனைனா, மொட்டை ராஜேந்திரன், பிரவீன் குமார், கல்லூரி வினோத், விஜே சித்து, விஜே ராகேஷ், லட்சுமிப்ரியா, நான்சி ஜெனிபர், ராஜேஷ், அதுல்யா சந்திரா, அருண்குமார், மேக்மணி, சதீஷ், ராம்போ, நீது வாசுதேவன், சத்யா, முனீஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:-ஒளிப்பதிவு – உதயசங்கர்,எடிட்டிங்-தீபக் எஸ்.துவாரகநாத், இசை-சித்துகுமார், கலை-பாக்யராஜ், சண்டை-டேஞ்சர் மணி, ஒப்பனை-ஏ.பி.முகமத், உடை-பாலாஜி, நடனம்-தஸ்;தா, பாடல்கள்-மோகன் ராஜன், நிர்வாக தயாரிப்பு-தேனி தமிழ் மற்றும் அரந்தை பாலா, துணை தயாரிப்பாளர்-செண்பகா தேவி, பிஆர்ஒ-சுரேஷ் சந்திரா, ரேகா.
மலைபிரதேச காட்டிற்கு சுற்றுலா செல்லும் சுனைனா மற்றும் நண்பர்கள் அங்கே யோகிபாபு மற்றும் கருணாகரன் இருவரையும் பார்த்து கொலைகாரர்கள் என்று பயந்து ஒடுகிறார்கள். அதன் பின் அதே இரவில் சுனைனா யோகிபாபு, கருணாகரனை பார்க்க மயங்கி விழுந்து விடுகிறார். என்ன செய்வதென்று தெரியாமல் இருவரும் சுனைனாவை தாங்கள் புதுப்பிக்கும் வேலை செய்யும் பங்களாவிற்கு தூக்கி செல்கின்றனர். சுனைனாவை தேடி கண்டுபிடிக்கும் நண்பர்கள் பங்களாவிலிருந்து அவரை காப்பாற்ற முயல்கிறார்கள். ஆனால் எதிர்பாராத விதமாக ஒவ்வொருவரும் இறந்து விடுகின்றனர். இதற்கு காரணம் யோகிபாபு மற்றும் கருணாகரன் என்று நம்பும் மீதி இருக்கும் நண்பர்கள், சுனைனாவை இவர்களிடமிருந்து காப்பாற்ற என்ன செய்தார்கள்? இவர்களை பின் தொடர்ந்து கொலை செய்ய முயல்வது யார்? எதற்காக? என்பதே பதற வைக்கும் க்ளைமேக்ஸ்.
யோகி பாபு, கருணாகரனை காமெடிக்காக முதன்மை கதாபாத்திரமாக வைத்து சுனைனாவின் துணையோடு மற்ற கதாபாத்திரங்களான மொட்டை ராஜேந்திரன், பிரவீன் குமார், கல்லூரி வினோத், விஜே சித்து, விஜே ராகேஷ், லட்சுமிப்ரியா, நான்சி ஜெனிபர், ராஜேஷ், அதுல்யா சந்திரா, அருண்குமார், மேக்மணி, சதீஷ், ராம்போ, நீது வாசுதேவன், சத்யா, முனீஷ் ஆகியோரை இணைத்து பயமுறுத்தும் த்ரில்லர் கதைக்கு உத்திரவாதம் கொடுக்க முயற்சித்துள்ளனர்.
சித்துகுமாரின் இசையையும், உதயஷங்கரின் ஒளிப்பதிவும் படத்தின் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி செய்வதோடு பின்னணியில் இசையும் கவனிக்க வைத்து திகில் கலந்து கொடுத்துள்ளனர்.
இயக்கம்-டென்னிஸ் மஞ்சுநாத். சென்டினல் தீவுகளில் நரமாமிசம் சாப்பிடும் கனிபல்ஸ் இனத்தின் கற்பனை கலந்து அது போல் மாமிச உணவை சாப்பிடும் செடிகள் மனிதர்களை கனிபெல்ஸாக மாற்றி சுற்றுலா வருபவர்களை கொலை செய்ய அதிலிருந்து தப்பிக்க போராடும் இளைஞர்கள் திரைக்கதையோடு துணிச்சல் சாகசம் நிறைந்த உயிரியல் விஞ்ஞானம் கலந்த திகிலுடன் கூடிய த்ரில்லர் கதையை தன்னால் முடிந்த வரை சிறப்பாக கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத். இவரின் முதல் முயற்சிக்கும், உழைப்பிற்கும் பாராட்டுக்கள்.
ட்ரிப் பயமுறுத்தும் துணிச்சலான மரண பயணம்.