டாப்ஸி நடிக்க இயக்குநர் சுந்தர்ராஜன் மகன் இயக்கும் முழு காமெடி படம்…. 

0
386

டாப்ஸி நடிக்க இயக்குநர் சுந்தர்ராஜன் மகன் இயக்கும் முழு காமெடி படம்…. 

பாலிவுட் பக்கம் அவ்வப்போது போய்விடும் டாப்ஸி, தமிழில் ஒரு முழுமையான நகைச்சுவைப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கெனவே ஜெயம் ரவியின் ஜன கன மன படத்தில் நடித்துவரும் அவர், புதுமுக இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் இயக்கும் படத்தில் நடிக்கப்போகிறார். அதில் விஜய் சேதுபதிக்கு மிக முக்கிய கதாபாத்திரம்.
நாம் தெருவில் பார்க்கும் ஒரு கலகலப்பான புத்திசாலிப்பெண்ணாக டாப்ஸியின் கதாபாத்திரம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. படத்தின் திரைக்கதை முழுவதும் நகைச்சுவை கலந்து பின்னப்பட்டிருப்பதாகவும், அதில் மிக முக்கியமான காமெடி நடிகர்களும் நடிப்பதாகவும் சொல்கிறார்கள்.

தற்போது இயக்குநர் தீபக், ஜெய்ப்பூரில் படப்பிடிப்பு நடத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். இந்த இயக்குநர் பிரபல இயக்குநர் ஆர். சுந்தர்ராஜனின் மகன் என்பதால் காமெடிக்குப் பஞ்சமிருக்காது என்று நம்பலாம். இயக்குநர் விஜயிடம் உதவி இயக்குநராக இருந்த அனுபவமும் அவருக்கு இருக்கிறது.