‘டான்’ படத்தின் சேட்டிலைட் உரிமையை வாங்கிய பிரபல தொலைக்காட்சி!

0
104

‘டான்’ படத்தின் சேட்டிலைட் உரிமையை வாங்கிய பிரபல தொலைக்காட்சி!

‘டாக்டர்’ பட வெற்றியை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் சிவகார்த்திகேயனின் படங்களுக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவுள்ள ‘டான்’ படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு பெருகியுள்ளது. இப்படத்தை அட்லீயிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ளார். காமெடி மற்றும் ஆக்ஷன் கலந்து உருவாகியுள்ள இந்த படத்தில் இரண்டாவது முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்திருக்கிறார், மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, முனீஷ்காந்த், காளி வெங்கட், பால சரவணன், ஷிவாங்கி, ஆர்ஜே விஜய் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் தயாரித்து இருக்கிறார். பொதுவாகவே சிவகார்த்திகேயன் படங்களில் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது, அதிலும் இந்த படத்தில் அவர் கல்லூரி மாணவனாக தோன்றியிருக்கிறார், அதனால் இப்படம் ரசிகர்களுக்கு நல்ல என்டெர்டெய்ன்மெண்ட்டாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனிரூத் இசையமைப்பில் இப்படத்திலிருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி, கோயம்புத்தூர், உடுமலைப்பேட்டை போன்ற இடங்களில் நடத்தப்பட்டது, மேலும் இப்படத்தின் ஒரு பாடல் காட்சி மட்டும் ஆக்ராவில் காட்சிப்படுத்தப்பட்ட இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் மற்றும் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நிறைவடைந்து படம் வெளியீட்டிற்காக காத்துகொண்டு இருக்கிறது. மேலும் இந்த திரைப்படம் மார்ச் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளதாக படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது. தற்போது இப்படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால் டான் படத்தின் சேட்டிலைட் உரிமையை கலைஞர் டிவி நிர்வாகம் வங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமையை நெட்ப்ளிக்ஸ் இயங்குதளம் வங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.