டாக்டர் படத்தில் கவனம் ஈர்க்கும் ’செல்லம்மா செல்லம்மா’ பாடல்!

0
153

டாக்டர் படத்தில் கவனம் ஈர்க்கும் ’செல்லம்மா செல்லம்மா’ பாடல்!

நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்தின் சூப்பர் ஹிட் அடித்த ‘செல்லம்மா செல்லம்மா’ பாடல் முன்னோட்ட வீடியோ வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் – பிரியங்கா அருள்மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்டர்’ படத்தை ’கோலமாவு கோகிலா’ பட இயக்குநர் நெல்சன் இயக்கியுள்ளார். விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தினையும் நெல்சன் இயக்கி வருவதால், டாக்டர் படத்திற்கு சிவகார்த்திகேயன் ரசிகர்களோடு விஜய் ரசிகர்களும் ஏகப்பட்ட எதிர்பார்பார்ப்புகளோடு காத்திருக்கிறார்கள். வரும் அக்டோபர் 9 ஆம் தேதி தியேட்டர்களில் ‘டாக்டர்’ வெளியாகவுள்ள நிலையில், தற்போது ’செல்லம்மா செல்லம்மா’ பாடலின் கிளிம்ப்ஸ் எனப்படும் முன்னோட்ட வீடியோ வெளியாகி இருக்கிறது.

’ரெளடி பேபி’, ‘புட்டபொம்மா’ பாடல் புகழ் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் கொரியோகிராஃபி செய்துள்ள ‘செல்லம்மா செல்லம்மா’ பாடல் ஏற்கனவே, சூப்பர் ஹிட் அடித்ததால் நேற்று கிளிம்ப்ஸ் வெளியாகும் என்று அறிவித்ததிலிருந்தே ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்து வந்தது.

அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் விதமாக வெளியாகியுள்ள ‘செல்லம்மா செல்லம்மா’ பாடல் கிளிம்ப்ஸ் ஸ்பீடாகவும், ஆனால், நடனம் பாடலுக்கேற்றவாறு இல்லாமல் ஸ்லோவாக இருந்தாலும்கூட, சிவகார்த்திகேயனின் எக்ஸ்பிரஷன்களாலும் ஸ்டைலான நடனத்தாலும் அனைத்தையும் மறக்கடித்து ரசிக்க வைத்துவிடுகிறன்றன என அவரது ரசிகர்கள் கூறுகின்றனர். இப்பாடலை நடிகர் சிவகார்த்திகேயன்தான் எழுதியிருக்கிறார்.