ஜெய் பீம் போல இன்னும் பல படங்கள் வரும் – நம் தலைமுறையை மாற்றும் – இயக்குனர் பா.ரஞ்சித்

0
327

ஜெய் பீம் போல இன்னும் பல படங்கள் வரும், நம் தலைமுறையை மாற்றும் – இயக்குனர் பா.ரஞ்சித்

ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி நேற்று இரவு வெளியான படம் ‘ஜெய்பீம்’. நடிகர் சூர்யா வழக்கறிஞராக நடித்துள்ள ஜெய் பீம் (Jai Bhim) திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகி உள்ளது. படத்தில் மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

பழங்குடியின மக்களின் வாழ்வியலை மையமாக எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தள பக்கத்தில் தங்களது கருத்தை பதிவு செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், சூர்யாவிற்கு ‘ஜெய் பீம்’ படத்தின் தலைப்பை கொடுத்த இயக்குனர் பா.ரஞ்சித், தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‘சாதி எதிர்ப்பையும், சாதி ஆதரவையும் சமநிலையில் பார்க்கும் சமூகத்தாரே-இதோ மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட ராசா கண்ணுவின் கதை போல பலகதைகள் இனி வரும். அது நம் தலைமுறையை மாற்றும். ஜெய்பீம் திரைப்படத்தை கொடுத்த திரு.சூர்யா, ஞானவேல் மற்றும் குழுவினர்களுக்கு பெரும் நன்றிகள். JaiBhim’ என்று பதிவு செய்து இருக்கிறார்.