ஜெய்ப்பூரில் தொடங்கிய படப்பிடிப்பு: டாப்சியுடன் இணையும் விஜய் சேதுபதி

0
244

ஜெய்ப்பூரில் தொடங்கிய படப்பிடிப்பு: டாப்சியுடன் இணையும் விஜய் சேதுபதி

விஜய் சேதுபதியின் கையில் நிறைய படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன. ஊரடங்கு நாட்களுக்குப் பிறகு தொடர் படப்பிடிப்புகளில் பிஸியாக இருக்கிறார். வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் கரும்பு தின்ன கூலியா என்பதைப் போல அவருக்கு உற்சாகம். தற்போது நளன் குமாராசாமி இயக்கத்தில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகிறார். விரைவில் ஜெய்ப்பூரில் நடக்கும் மற்றொரு படப்பிடிப்பில் டாப்ஸியுடன் நடிக்கவுள்ளார்.

இயக்குநர் சுந்தரராஜனின் மகன் தீபக் சுந்தரராஜன் இயக்கும் முழுநீள காமெடி படத்தில் டாப்ஸி கலகலப்பான பெண்ணாக வருகிறார் டாப்ஸி. சில நாட்களுக்கு முன்புதான் படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் தொடங்கியுள்ளது. முதன்முறையாக டாப்ஸியுடன் இணையும் விஜய் சேதுபதிக்கு இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரம். யோகிபாபு உள்பட பெரும் நட்சத்திரக் கூட்டமே படத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

பாலிவுட் பக்கம் நகர்ந்துவிட்ட டாப்ஸி மெல்ல தமிழ் சினிமா பக்கம் கவனம் காட்டத் தொடங்கியுள்ளார். தனக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டுமே அவர் தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார்.